ந.பெரியசாமி
நெடுநாளைய ஆசையால்
பிரியமாக பிடித்து வந்தேன்ஒரு பசுவின் நிழலை
வீட்டின் முன் மொட்டையடிக்கப்பட்டிருந்த
புங்கை மரத்தில் கட்டி வைத்தேன்
இலைகள் துளிர்க்கத் தொடங்கின
கொழுத்து வளர்ந்தது நிழல்
தன் காமத்தை குரலில் கசிவிக்க
ஓரிரு முறை இணையோடு சேர்ப்பித்தேன்
தெருவாசிகள்
மீந்தவைகளை கொடுக்கத் துவங்கினர்
நீலம் புயல் கடந்த அந்தியில்
குட்டி நிழல் பிரசன்னமாகியது...