செவ்வாய், நவம்பர் 13, 2012

பொன். வாசுதேவனின் கவிதை


பொன்.வாசுதேவன்

எதையாவது சொல்லத் துடிக்கிறோம்.
எதையாவது யாருக்காவது
சொல்லியே ஆக வேண்டும்
இல்லையென்றால்
இன்றைய பொழுது போகாது
துயரம் என்னவென்றால்
யாருக்கு சொல்கிறோம் என்பதே
பலநேரங்களில் நமக்குப் புரியாது
உனக்கு சொல்ல வேண்டியதை அவனுக்கும்
அவளுக்கு சொல்ல வேண்டியதை உனக்கும்
யாருக்கோ சொல்ல வேண்டியதை யாவருக்கும்
எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறோம்
ஒளிரும் கணித்திரையில்
நாம் தட்டச்சிட்டு சொல்ல வேண்டியதை
வார்த்தைகளின் ஒலியற்று சொல்லி முடித்ததும்
நமக்கு திருப்தியாகிறது
திருப்தியை விட மன பாரத்தை இறக்கி வைத்துவிட்ட
குரூரமும் வன்மமும் நிறைவு தருகிறது
படங்களாக சொல்கிறோம்.
பாடல்களாக சொல்கிறோம்.
எழுத்துகளாக சொல்கிறோம்.
இரசனையாக சொல்கிறோம்.
ஓவியமாக சொல்கிறோம்.
எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டு
திரும்பிப் பார்க்கிறோம்
நம் அன்னை தந்தையரும்
சகோதர சகோதரியரும்
மனைவி பிள்ளைகளும்
உற்றார் உறவுகளும்
ஏதாவது சொல்லிவிட மாட்டோமா என்று
நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
கணிணியை அணைத்துவிட்டு கண்மூடி
குப்புறப் படுத்துக் கொள்கிறோம்.
இந்தக் கவிதையின் எளிய வடிவம் :
எதையாவது சொல்லத் துடிக்கிறோம். எதையாவது யாருக்காவது சொல்லியே ஆக வேண்டும் இல்லையென்றால் இன்றைய பொழுது போகாது துயரம் என்னவென்றால் யாருக்கு சொல்கிறோம் என்பதே பலநேரங்களில் நமக்குப் புரியாது. உனக்கு சொல்ல வேண்டியதை அவனுக்கும் அவளுக்கு சொல்ல வேண்டியதை உனக்கும் யாருக்கோ சொல்ல வேண்டியதை யாவருக்கும் எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறோம் ஒளிரும் கணித்திரையில் நாம் தட்டச்சிட்டு சொல்ல வேண்டியதை வார்த்தைகளின் ஒலியற்று சொல்லி முடித்ததும் நமக்கு திருப்தியாகிறது திருப்தியை விட மன பாரத்தை இறக்கி வைத்துவிட்ட குரூரமும் வன்மமும் நிறைவு தருகிறது படங்களாக சொல்கிறோம். பாடல்களாக சொல்கிறோம். எழுத்துகளாக சொல்கிறோம். இரசனையாக சொல்கிறோம். ஓவியமாக சொல்கிறோம். எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டு திரும்பிப் பார்க்கிறோம் நம் அன்னை தந்தையரும் சகோதர சகோதரியரும் மனைவி பிள்ளைகளும் உற்றார் உறவுகளும் ஏதாவது சொல்லிவிட மாட்டோமா என்று நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கணிணியை அணைத்துவிட்டு கண்மூடி குப்புறப் படுத்துக் கொள்கிறோம்.