வியாழன், டிசம்பர் 20, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 11


101
நிலவைப்பார்க்கும்போதெல்லாம்
எனக்குப் பின்னால் ஓடி ஒழிந்துகொள்கிறது இருள்.

102
முன்னால் ஒவ்வொரு அடி எட்டி வைக்கிறேன். எனினும்இ போகவேண்டிய துாரம் குறையவில்லை.
அதிகரிக்கிறது.

103
காதல் நமக்கு எதையும் விளங்கப்படுத்துவதில்லை. அச்சப்படுத்துகிறது ஒவ்வொரு கணமும்.

104
அருங்காட்சியகத்தில் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தது எலி. பூனையின் மீது இட்டுக்கட்டப்பட்டிருந்த புராதனமான குற்றச் சாட்டு கூண்டுக்கு வெளியே பாதுகாப்பாக இருந்தது.

105
வார்த்தைகளால் கனவொன்றை உருவாக்கினேன்.
அதைக் காண்பதற்காக அனைவரும் உறங்கினர்.

106
ஓய்வெடுப்பதற்காகஇ கற்பனை மாறுவேடமிட்டு வரும்போது நீங்களோ அதை பொய் என அடையாளப்படுத்துகிறீர்கள்.

107
அறை நிறையக் குரல்கள்.தனது சொந்தக் குரலைக் கண்டுபிடிக்க எவராலும் முடியவில்லை.

108
மிக வேகமாக முளைக்கக்கூடிய கனவொன்றை நட்டு வைத்திருக்கிறேன்.

109
நொறுங்கும் இருளினுாடே ரகசியமாக நுழைகிறது பனி.

110
கனவைத் தொடங்குங்கள்