புதன், டிசம்பர் 19, 2012

இப்படி பல கதைகள் கேட்டிருக்கிறேன்.

றியாஸ் குரானா


அவருடைய கற்பனையில்
மலை விளிம்பில் நீ இருக்கிறாய்
எனச் சொன்னேன்.
பல வருடங்களா 
அவர் கற்பனை செய்தும்
இன்னும் என்னை விழவைக்க
முடியவில்லை என்றாள்.

நீ என்ன செய்கிறாய் என வினவினேன்.

விண்மீன்கள் அழகானவை
அவைகளை ரசித்து
எனது நேரத்தை வீணடிப்பதில்லை.
புள்ளிகளாக நினைத்து அவைகளை இணைத்து
நகரங்களை உருவாக்குகிறேன்.
அதற்குள் மிக வசதியான ஒரு வீட்டில்
வசித்துக்கொண்டிருக்கிறேன்.
நானிருக்கும் இடத்திலிருந்து
மிகவும் கீழேதான் மலையிருக்கிறது.

மலையின் விளிம்பில் சிக்கமாட்டேன்.

மேலும் சொன்னதாவது,
கற்பனையைப் பின்தொடர்ந்து
நான் போவதே இல்லை
இடையிடையே அங்கிருந்து
வெளியேறியும்விடுகிறேன்.
அப்போது சந்திக்க வாய்ப்புண்டு
அவரிடம் இதைச் சொல்லுங்கள்