செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் -2

11
ஆரம்பத்தில் குறைந்த ஒளியை வைத்துக்கொண்டே வானத்திற்கு வந்தது நிலவு.பின் தேயவும் வரளவும் பழகியது.காலப் போக்கில் அணைந்துவிடவும் பழகிக் கொண்டது. இன்று உள்ள நிலவாக மாற நீண்டகாலமாக கடுமையாக உழைத்திருக்கிறது என்று அவர் கூறினார்.

12
மலை சாய்ந்து கொண்டு வருகிறது. அடிவாரத்தில் இருக்கிறேன். தவத்தைக் கலைக்கப் போவதில்லை. மலை விழாது நிறுத்தங்கள்.

13
விருப்பத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அறையில் சிக்கிக்கொண்டேன்..அவசரமாக சுவர்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. நான் வெளியேற வழிவிடவில்லை.பல வழிகளை உருவாக்கி தப்பிக் முயற்சித்தாலும் அந்த அறையினுள்தான் சிக்கிக்கொள்கிறேன். வாழ்க்கைக்காக நான்வைத்த பெயர் அறை.

14
வயல் வெளியெங்கும், வளைந்து நெளிந்து பாதை போட்டுச் செல்கிறது காற்று. அதில் தனியாக நடந்து செல்கிறேன்.

15
தனியாக இருக்கிறேன்.யாரும் என்னுடன் பேசவில்லை.

16
எனக்கென்று சொந்தமாக ஒரு இரவிருக்கிறது. அங்கு அடிக்கடி செல்வேன். உலகிலே மிக ஆடம்பரமானது துாக்கம்தான்.

17
ஒவ்வொரு நாளும் உன் வீட்டினருகில் கொண்டு வந்து எனது இரவை நிறுத்தி வைக்கிறேன்.அதிலேறி இதுவரை பயணித்ததில்லை.

18
இன்னும் 22 பக்கத்தைக் கடந்தால் அவளை சந்தித்து விடுவேன்.நேரடியாக அவளிருக்கும் பக்கத்திற்குள் நுழைந்தேன்.அடைப்புக் குறிகள் நிரம்பி இருந்தன.அவைகளைத் திறக்க வேண்டாம் உள்ளே நாய் உறங்குகிறது என்று ஒரு குறிப்பிருக்கிறது.

19
மரங்கள் எவ்வளவு தடுத்தாலும், கிளைகளுக்குள் நுழைந்து நிலத்தில் அமருகிறது நிலவொளி.

20
விடிந்து விடுவதற்கு இரவு மறந்துவிட்டால் நல்லது.