செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 7

61
கண்ணாடியைப் பார்க்காதீர்கள் அது நீதிக் கதைகளை உருவாக்குகிறது.

62
என்னைக் காணும் ஒவ்வொரு முறையும்
தனது முதலாவது அலையை
அடித்துக் காட்டுகிறது கடல்.

63
ஒரு சொல் மட்டும் ஒளிரும்படி பார்த்துக்கொள்வேன்.
அந்த வெளிச்சத்தில்,
எவ்வளவு பெரிய பிரதியையும் கடந்துவிடலாம்.

64
என்னைக் காணும் ஒவ்வொரு முறையும்
தனது முதலாவது அலையை
அடித்துக் காட்டுகிறது கடல்.

65
ஒரு சொல் மட்டும் ஒளிரும்படி பார்த்துக்கொள்வேன்.
அந்த வெளிச்சத்தில்,
எவ்வளவு பெரிய பிரதியையும் கடந்துவிடலாம்.

66
தளர்வாக இருக்க வேண்டும் என்பதற்காக
சிறிதளவு தனிமையைக் கிழித்தேன்.
அதனுாடாக பெருக்கெடுக்கிறது நினைவுகள்.

67
பார்ப்பதற்கு முன் மறைந்துவிட்டது நட்சத்திரம்.

68
அதிகம் பயிற்றப்பட்ட சொற்களால்
நீச்சலடித்தும்
கரையேற முடியாதளவு
ஆழமாக இருந்தது தாள்.

69
பனியைக் கண்டு பிடித்தவர் சொன்னார்
அதற்குள் இரண்டு நிழல்கள் வசிப்பதாக
போனால் போகிறது என்று நம்பினேன்

70
நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஜனநாயகச் சூழலில்தான் இருக்கும். 
அதை மறுக்குமிடங்களில் அல்ல.