செவ்வாய், பிப்ரவரி 12, 2013

அந்தி

றியாஸ் குரானா

உடையக்கூடிய நிலையில் இருந்தது
இன்றைய மாலைப் பொழுது

கதிரவனைப் பிடித்து
ஒளியை சற்று அதிகரித்தேன்

பரவியிருந்த இருளை
மெதுவாகத் துடைத்துவிட்டேன்

காற்று வீசும்படி
மரங்களை அசைத்துவிட்டேன்

மீண்டும் மீண்டும்
பாடிப் பறந்து வரும்படி
பறவைகளைப் பறக்கவிட்டேன்

கண்களை அனுப்பி
இரவை மறைத்துவிடும்படி சொன்னேன்

நீண்ட நேரம்
தாக்குப் பிடிக்க முடியவில்லை

உடைந்தே விட்டது

அந்திப்பொழுதை
சரிசெய்ய முடியவில்லை