திங்கள், மார்ச் 25, 2013

கீழுள்ள கூற்றை விளக்கவும்

றியாஸ் குரானா
‘திரைப்படத்தின் குறித்த காட்சி
பார்வையாளர்கள் நுழைவதற்கு ஏதுவாக மாறியிருந்தது’

விசில் சத்தங்கள்
கூக்குரல்கள்
மகிழ்சி ஆரவாரங்கள் கிழம்ப
அவைகளினூடாகத்தான்
கதாநாயகன் திரையில் தோண்றுகிறார்.
திரையரங்கில் நிரம்பி வழிந்த கரகோசங்கள்
மெல்ல வற்றிக்கொண்டிருந்தன
அவசரமாக
சுவரில் மோதி எதிரொலித்தவைகள்
செவியிலிருந்து தூரமாகியபடி இருந்தன

அடுத்த காட்சியில்,
கதாநாயகி ஆற்றோரம் காத்திருக்கிறாள்
பெரும் வரலாற்றுத் துயரை
எதிர்கொள்வதைப்போல
திரையரங்கே அமைதியாகின.
அவளைக் கடந்து செல்ல எத்தனித்த
புல்லாங்குழலிசை நுழைந்து
அரங்கின் அமைதியைக் கைப்பற்றியது
மெதுவாகத் தொடங்கி
உரத்து ஓலமிடும் வயலினின் அழுகை
அவசரமாகக் குறுக்கிட்டு
அனைவரினுள்ளும் உறையவைத்தது
திரையில் உருவாகும்
மங்கலான இருளினுள்
அவள் மூழ்கிக்கொண்டிருந்தாள்

அவளின் தலைக்கு மேலிருந்த
மரக்கிளையின் இலைகள்
இதயத்திற்கு நிகராகத் துடித்தன
எதிர்த்திசைக்குத் திரும்பி
ஆறு ஓடத்தொடங்கியது
நாயகி காத்திருக்கிறாள்
நாயகன் இன்னும் வரவில்லை

துயரைத் தாங்காத நான்
எழுந்து, அவளருகே சென்று
ஆறதல்கள் சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

அன்றிலிருந்து,
கூற்றை வாசிக்கவும்.