திங்கள், மார்ச் 25, 2013

துயரம்


றியாஸ் குரானா

மண் தரையும் தண்ணீரும்
கடலுக்கு தேவைப்பட்டது
அங்கிருக்க
ஒரு மனிதன் தேவைப்பட்டது
சோகமாக இருக்கும்போதுதான்
அங்குவரவேண்டுமென
அவன் சொன்னான்
அதற்காக அவசரமாக
காதலில் தோற்க வேண்டும்
தோற்பதற்கு முதலில்
காதலிக்க வேண்டும்
ஒரு பெண்ணை தேடினான்
அதற்காக, பஸ் தரிப்பிடத்தில்
காத்திருக்கிறான்.
அதோ வருகிறாள்
வாழ்நாளில்,
தற்போதுதான் சந்திக்கும்
இந்தப் பெண்தான்
பல நாட்களுக்கு முன்
கடற்கரையில் சோகமாக
அமர்ந்திருக்க காரணம்.