வெள்ளி, செப்டம்பர் 13, 2013

இருவரின் ஒரு மாலை நேரம்

 றியாஸ் குரானா

வாகனத்தை முதலில்
ஓட்டியவரின் பெயர் மணி.

மனம் உடையும் போதெல்லாம்
அங்கு மரமொன்று
தோன்றுவது வழக்கம்

விரிந்த வானமோ
அச்சுறுத்தும் வெற்றிடமோ
தோன்றுவது அபூர்வம்

வழக்கத்திற்கு மாறாக
இன்று,மௌனம் தோன்றியது
சலசலத்து அதனடியில்
சப்தங்கள் ஒதுங்கின

செல்லும் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியாது
உடைந்த மனம்
பின்தொடர்ந்து வருகிறது.

வாலைக் கிளப்பியபடி
துள்ளிக் குதித்து
குறுக்கிட்டது ஒரு கன்றுக்குட்டி
பிறேக்கைப் பிடித்து
நிறுத்திவிட்டேன்

பதட்டத்தில்
அருகிலிருந்தவரை
திரும்பிப் பார்க்கிறேன்
அப்போதுதான், அவர்
நித்திரைவிட்டு
எழும்பிக்கொண்டிருந்தார்
கண்களைக் கசக்கி
கொட்டாவி விட்ட படி
எந்த இடம் என வினவினார்
நான் செயலற்றிருந்தேன்

வாகனத்தை ஓட்டும்படி
அவரிடம் சொன்னேன்.

மணி பயந்திருந்தான்
அடிக்கடி தண்ணீர் அருந்தி
எதையோ நடித்துக்காட்டினான்

வாகனம்
காற்றைத் துரத்திக்கொண்டிருந்தது
மூலிகை வாசம் நிறைந்த
மலைப்பாதையின்
வளைவைக் கடக்கும்போது,
பரபரப்போடு இருந்த மணி
வாகனத்திலிருந்து குதித்து
அங்கே பறந்து கொண்டிருந்த
பறவையொன்றின்மீது தாவினான்

திடுக்கிட்ட நான்
மலையில் முட்டி
வாகனத்தை நிறுத்தினேன்
புன்னகைத்துக்கொண்டு
கையசைத்த மணி
பறவையில் சென்றுகொண்டிருந்தான்.

அவன் வீட்டில்
என்ன சொல்வது