செவ்வாய், டிசம்பர் 31, 2013

சவப்பெட்டிக்குள் ஒரு பார்சல்

சவப்பெட்டிக்குள் ஒரு பார்சல்

கல்லுாரன்

எங்கேயோ அனுப்புதற்காய் பொதி செய்யப்பட்ட
பார்சலாகிக் கிடந்தேன் நான்,
திடீரென என் கனவில்
ஏதோ முகவரி எழுதப்படுவது போல் இருந்தது
எனினும்
எங்கு எடுத்துச் செல்லப்படுவேன்
நான் குழம்பினேன்
ஏனெனில்,
எழுந்து பார்க்க முடியாதபடி,
உள்ளடக்கங்களுடன்
நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன்

நான் கூச்சலிட்டுக் கத்தினேன்.
யாருக்கும் கேட்கவில்லை.

ஒரு பார்சலுக்குள் தடுத்து வைக்;கப்பட்டு
நான் ஏன் சிறைவைக்கப்பட்டிருக்கிறேன் ?
எனது சூழலிருந்து என்னைப் பிடுங்கி எடுத்து
காணாமல் செய்தது என்ன குற்றத்திற்காக ?

மீண்டும் கூச்சலிட்டுக் கத்தினேன்
யாருக்கும் கேட்கவில்லை.

நான் அங்கும் இங்கும்
தள்ளாடியபடி
ஒரு சவப்பெட்டிக்குள்
நால்வரின் தோழ்களில் நான்
இருவர் என் கால்மாட்டில்
இருவர் என் தலைமாட்டில்
என்னை சுமந்து சென்றனர்.

இறுதியில்
எவராலும் எந்த முகவரியிலும் ஏற்கப்படாமல்
எங்கும் ஒப்படைக்கப்படாமல்
எனது முகவரிக்கே நான் திருப்பி அனுப்பப்பட்டிருந்தேன்


ஆங்கில வடிவம்

A poem in English by Ponniah Ganeshan
jkpopy; fy;Yhud;


THE PARCEL IN A COFFIN


Suddenly, I have become a parcel in my dream
Bundled up to be sent somewhere,
Being confined with contents
I could not see the address above
Written.

Where am I to be taken and delivered ?

I shouted and shouted for no one listened
I felt that someone taking me somewhere.

Being detained into  the parcel
I felt as if I was in prison
Having  been disappeared and removed
out of my environ
For reason unknown

I was then taken hither and thither .
In a coffin, shouldered by four men
Two in front and two behind
Finally I am undelivered

and returned to my address